குமாரபாளையம்; காதலர் தினத்தையொட்டி பரிசு பொருட்கள் விற்பனை தீவிரம்

பள்ளிப்பாளையத்தில் காதலர் தினத்தையொட்டி பரிசு பொருட்கள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2024-02-11 15:00 GMT

பள்ளிப்பாளையத்தில் காதலர் தினத்தையொட்டி பரிசு பொருட்கள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.

காதலர் தினத்தையொட்டி பரிசு பொருட்கள் விற்பனை தீவிரம்

பள்ளிப்பாளையத்தில் காதலர் தினத்தையொட்டி பரிசு பொருட்கள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.

காதலர் தினம் என்றாலே நம் நினைவுகளுக்கு வருவது அழகிய பரிசு பொருட்களும், ரோஜா பூக்களும் தான், அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று, ரோஜா பூக்களின் விலை கணிசமாக அதிகரித்து காணப்படும். தோராயமாக ஒரு ரோஜா பூ வழக்கமான நாட்களில் 20 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், காதலர் தின நாட்களில் 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்தியா முழுவதுமே இத்தகைய நிலை இருப்பதை நாம் காணலாம்.

அதேபோல இதற்கு அடுத்தபடியாக காதலர் தினத்தில் அன்பை பரிமாறிக் கொள்ளும் வகையில், நினைவு பரிசுகளை வழங்குவது காலங்காலமாக தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அதனடிப்படையில் தங்கள் மனம் விரும்பும் காதலன் அல்லது காதலிக்கு, தங்கள் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு வகையான பரிசு பொருட்களை காதலன் அல்லது காதலிக்கு வழங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.

இன்றைய நவீன யுக காதல் பல்வேறு நிலைகளை கடந்து இருந்தாலும், பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், சாதி மதத்தை வேரறுத்து சமத்துவத்தை விதைக்கும், காதலர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ல் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலையில் செயல்படும் தனியார் பரிசுப் பொருள் அங்காடியில், காதலர் தினத்தை ஒட்டி ஏராளமான பரிசு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.


இது குறித்து கடையின் உரிமையாளர் சரவணன் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்திற்கு சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அனைத்து விதமான பரிசு பொருட்களையும் வாங்கி விற்பனை செய்து வருகிறோம். இந்த ஆண்டு ஒரு சில புதிய மாடல்களில் காதலர் தின பரிசு பொருட்கள் வாங்கி வந்து வைத்துள்ளோம். காதலர் தினம் என்பதால் ஆண், பெண் மட்டும் பரிசு பொருட்களை வாங்க எங்கள் கடைக்கு வருவதில்லை. தந்தை மகள் பாசத்தை வெளிப்படுத்துவதற்கும், தங்கை,தம்பி பாசத்தை வெளிப்படுத்துவதற்கும் என காதல் உறவுகளை தாண்டி, பல்வேறு வகையில் அன்பை வெளிப்படுத்தும் தினமாகவும் இந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தை பலரும் கொண்டாடுகின்றனர் .

அதன் அடிப்படையில் அனைத்து வகையான பரிசு பொருட்களும் குறைந்த விலையில் இருந்து கணிசமான விலை வரை உள்ள பரிசு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை காதலர் தினம், பொங்கல் விழா போன்ற விசேஷ நாட்களில் வாழ்த்து அட்டைகள் அதிகளவு மக்களிடம் வரவேற்பு இருந்ததால் அது அதிகம் விற்பனையாகி வந்தது .

தற்போது பெரும்பாலானோர் அதை விரும்பாததால் அதை நாங்கள் வாங்குவதையும் நிறுத்திவிட்டோம். சந்தையில் புதிதாக கிடைக்கப்பெறும் காதலர் தின பரிசு பொருட்களை மட்டுமே, குறிப்பாக இளைஞர் இளைஞர்களை கவரும் வகையிலான பரிசுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறோம் அது மட்டுமின்றி அவர்கள் விருப்பபடும் வடிவமைப்பில் பரிசுப் பொருட்களை நாங்களே வடிவமைத்து தருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார். அன்பெனும் விதையை அகிலமெங்கும் வீசி ,சமத்துவத்தை போதிக்கும் காதலர் தினத்தை இன்முகத்தோடு வரவேற்போம்!

Similar News