சி.ஐ.டி.யூ சார்பில் 20 சதவீதம் போனஸ் கேட்டு தெருமுனை பிரச்சார கூட்டம்

குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ விசைத்தறி தொழிற்சங்கம் சார்பில் 20 சதவீதம் போனஸ் கேட்டு நகரம் முழுவதும் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.;

Update: 2024-01-07 14:30 GMT

சி.ஐ.டி.யூ சார்பில் 20 சதவீதம் போனஸ் கேட்டு, தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ விசைத்தறி தொழிற்சங்கம் சார்பில் 20 சதவீதம் போனஸ் கேட்டு நகரம் முழுவதும் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.

விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் போனஸ் வழங்க அரசு சார்பில் அரசானை இட்டு உத்திரவாதம் செய்கிறது. ஆனால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு இதுவரை போனஸ் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட சிறப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 20 சதவீதம் போனஸ் கேட்பது என முடிவு செய்து, நேற்று நகரம் முழுதும் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது.

பொங்கலுக்கு 15 நாட்களுக்கு முன்பே போனஸ் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் அசோகன், மாவட்டதலைவர் மோகன், நகர செயலர் பாலுசாமி, நகர பொருளர் வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். ஓலப்பாளையம், சடையம்பாளையம், சத்யாபுரி, காந்திபுரம், சந்தை பேட்டை, கே.ஊ.என். தியேட்டர் பஸ் ஸ்டாப், நாராயண நகர், சுந்தரம் நகர், ஆனங்கூர் பிரிவு ஆகிய இடங்களில் இந்த தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.

சிறப்பு  பேரவைக்கூட்டம்

நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் குமாரபாளையத்தில் சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது.

நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் குமாரபாளையத்தில் சிறப்பு பேரவை கூட்டம் நிர்வாகி சக்திவேல் தலைமையில் நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் அசோகன் பங்கேற்று கோரிக்கையை வலியுறித்தி பேசினார்.

இந்தக் கூட்டத்தில் குமாரபாளையத்தில் விசைத்தறி தொழில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஆண் பெண் தொழிலாளர்களுக்கும், 2023 தைப்பொங்கல் பண்டிகையையொட்டி விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஆண் பெண் தொழிலாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும், போனஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்களுக்கும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும் மனு அனுப்புவது, விசைத்தறி உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பாகவே தைப்பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்,

.போனஸ் பிரச்சனையில் உரிய தீர்வு எட்டப்படாத பட்சத்தில், ஜனவரி 7 முதல் ஆனங்கூர் பிரிவு சாலை, நாராயண நகர், ஓலப்பாளையம், காந்திநகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எண்ணற்ற தொழிலாளர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது, 11-ம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்வது, ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விசைத்தறி தொழிலாளர் சங்க நகர குழு செயலாளர் பாலுசாமி, பொருளாளர் வெங்கடேசன், உள்ளிட்ட ,விசைத்தறி தொழிலாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Similar News