குமாரபாளையம்; ஆடுகள் கோமாரி நோய்க்கு சிறப்பு மருத்துவ முகாம்

குமாரபாளையம் அருகே ஆடுகளுக்கு கோமாரி நோய் தாக்கியதால், இலவச மருத்துவ முகாம் நடந்தது.;

Update: 2023-12-28 14:00 GMT

குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையம் பகுதியில் கால்நடைத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

குமாரபாளையம் அருகே ஆடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதலால்,  இலவச மருத்துவ முகாம் நடந்தது.

குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையம், நல்லாம்பாளையம், குட்டிக்கிணத்தூர், பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆடுகளுக்கு கோமாரி நோய் தாக்கி உள்ளதாக தெரிகிறது.கோமாரி நோய் தாக்கி குட்டிக்கிணத்தூர் பெருமாள் கோவில் பகுதியில் நவீன், 23, என்பவரின் ஆடுகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதில் ஒரு ஆடு இறந்து விட்டது. மீதமுள்ள சில ஆடுகள் கோமாரி நோய் தாக்கி, கால்கள், நாக்கு, மூக்கு பகுதியில் புண் ஏற்பட்டு நடக்க முடியாத அளவிற்கு உள்ளது. இது இந்த பகுதியில் பல இடங்களில் உள்ள ஆடுகளுக்கு கோமாரி நோய் வந்துள்ளது.

இதுமேலும் தொடர்ந்து பரவி வருவதால், விவசாயிகள் அச்சம் கொண்டுள்ளனர். இவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், கால்நடை துறை சார்பில் சிறப்பு முகாம்கள் அமைத்து, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததின்படி, வீரப்பம்பாளையம் பகுதியில் கால்நடைத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

இங்கு கால்நடைகளுக்கு நோய் தடுப்பு ஊசி போடப்பட்டது. மேலும் சிறப்பான கால்நடைகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். கோமாரி நோய் தடுப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

Similar News