குமாரபாளையத்தில் ஜன. 28ல் ஜல்லிக்கட்டு நடத்த கலெக்டரிடம் கோரிக்கை
குமாரபாளையத்தில் ஜன. 28ல் ஜல்லிக்கட்டு நடக்க அனுமதி கேட்டு, மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.;
குமாரபாளையத்தில் ஜன. 28ல் ஜல்லிக்கட்டு நடக்க அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜன. 28ல் 8வது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து அரசிதழில் வெளியிட செய்து, ஜன. 28ல் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி வழங்க வேண்டி, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார், நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு கொடுத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. பல ஊர்களில், பல மாவட்டங்களில், பல மாநிலங்களில் மற்றும் பல வெளிநாடுகளில் இருந்து கூட குமாரபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பொங்கல் விழாவிற்கு வந்தவர்கள் ஜல்லிக்கட்டு வரை காத்திருந்து, அதை பார்த்துவிட்டு ஊருக்கு போவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூட மிகுந்த ஆர்வத்துடன் வந்து பங்கேற்று வருகிறார்கள்.
முன்னோர்கள் செய்த ஜல்லிகட்டு சாதனை, தற்போது நம் தலைமுறையில் காட்ட வேண்டும் என, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து கொண்டு வந்து, ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வைக்கின்றனர்.