குமாரபாளையத்தில் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

குமாரபாளையத்தில் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகத்தை மாவட்ட வழங்கல் அலுவலர் துவக்கி வைத்தார்.;

Update: 2024-01-07 13:30 GMT

குமாரபாளையத்தில் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகத்தை மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார்.

குமாரபாளையத்தில் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகத்தை மாவட்ட வழங்கல் அலுவலர் துவக்கி வைத்தார்.

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் துவங்கியது. காவேரி நகர் பகுதியில் இதனை மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார்.

இதுகுறித்து குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் அஹ்மத் கூறியதாவது,

குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட 105 ரேசன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் துவக்கப்பட்டது. இது ஜன.9 வரை வழங்கப்படும். பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படவுள்ளது. ஜன. 10 முதல் பொங்கல் தொகுப்பு, பணம் ஆகியவை வழங்கும் பணி துவங்கும். இந்த டோக்கன்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்படுகிறது. ரேசன் கடைகளில் கூட்டம் அதிகம் கூடாத வகையில், கொடுக்கப்படும் டோக்கனில் பொங்கல் தொகுப்பு பெற வேண்டிய நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News