பள்ளிபாளையத்தில் மறைந்த விஜய்காந்த்துக்கு அனைத்து கட்சியினர் சார்பில் அஞ்சலி

Political Parties Tribute To Vijaykanth பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் அனைத்து கட்சிகள் சார்பில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-12-31 17:00 GMT

பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் அனைத்து கட்சிகள் சார்பில் மறைந்த  தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்துக்கு   இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

Political Parties Tribute To Vijaykanth

தமிழக மக்களால் கருப்பு எம்ஜிஆர், கேப்டன், என்று அன்புடன் அழைக்கப்பட்ட நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலமில்லாமல் காலமானார். அவரது மறைவிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் தொண்டர்கள் என வரிசைகட்டி வந்து அஞ்சலி செலுத்தினர். சென்னை போக்குவரத்தே ஸ்தம்பித்தது. பின்னர் அரசு மரியாதையுடன் அவரது நல்லடக்கமானது கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் நடந்தது. பின்னர் தேமுதிக பொதுச்செயலாளரும் அவரது மனைவியுமான பிரேமலதா அரசுக்கு அவருக்கு பொது இடத்தில் நினைவுமண்டபம் மற்றும் சிலை வைக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பள்ளிபாளையத்தில் விஜயகாந்த்க்கு அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் அனைத்து கட்சிகள் சார்பில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இரண்டு தினங்களுக்கு முன்பாக, சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.. லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் அவருடைய உடல் , சென்னை தேமுதிக தலைமை அலுவலக இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.. இதனை அடுத்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு எம்ஜிஆர் சிலை அருகே, அனைத்து கட்சிகள் பங்கேற்ற இரங்கல் கூட்டம் நடைபெற்றது.. இந்த நிகழ்வுக்கு நகர தேமுதிக செயலாளர் வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார்.. மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார் .

இந்த நிகழ்வில் அதிமுக, திமுக, மதிமுக, பாமக, பாஜக ,திராவிடர் விடுதலைக் கழகம், காங்கிரஸ், லோக் ஜன சக்தி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள், பொதுநல அமைப்புகள், ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.. நிகழ்வில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்வில் பங்கேற்றவர்கள், விஜயகாந்த் குறித்த தங்கள் மலரும் நினைவுகளை, பகிர்ந்து கொண்டனர்.

Tags:    

Similar News