Dmk Women Wing Meeting தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டம்

Dmk Women Wing Meeting குமாரபாளையத்தில் தி.மு.க. மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.;

Update: 2023-11-01 13:15 GMT

குமாரபாளையத்தில் திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

Dmk Women Wing Meeting 

குமாரபாளையம் தி.மு.க. கட்சி அலுவலகத்தில் மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட மகளிர் மற்றும் தொண்டரணி அமைப்பாளர் ராதிகா, துணை அமைப்பாளர் கயல்விழி தலைமை வகித்தனர். நகர வடக்கு அமைப்பாளராக தி.மு.க. தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட நகராட்சி தலைவர் விஜய்கண்ணனுக்கு பாராட்டு தெரிவித்தல், கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுதல், பூத் கமிட்டி அமைக்க உதவிடுதல், தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தல், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாமில் பொதுமக்களுக்கு உதவிடுதல், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மகளிர் தொண்டரணியினர் பெருமளவில் பங்கேற்றனர்.

பேச்சுத்திறமை என்பது நாளடைவில் குறைந்து வருகிறது. இதைத் தவிர்க்க தி.மு.க. சார்பில் பேச்சு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. பேச்சாளர் அன்பழகன் பயிற்சியினை துவக்கி வைத்தார். இது குறித்து மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

தி.மு.க. மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியிலும் இருந்த முன்னாள் தலைவர்கள், பேச்சாளர்கள் இரவு பகலாக பேசித்தான் மத்திய, மாநிலங்களில் ஆட்சியில் அமர்ந்தனர். அண்ணா,கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, உள்ளிட்ட தலைவர்கள் இரவு, பகலாக தேர்தல் பிரசாரம் செய்வார்கள்.இவர்களின் பேச்சைக் கேட்க பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். கட்சியின் கொள்கைகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல, ஒவ்வொரு கட்சி சார்பில் தலைமைக்கழக பேச்சாளர்கள் என நியமனம் செய்யப்பட்டனர். மூத்த அரசியல்வாதிகள் மேடையில் பேசும் முன்பாக, தலைமைக்கழக பேச்சாளர்கள் கட்சியின் கொள்கைகள், கட்சி உருவான விதம், கட்சி நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் செய்த தியாகங்கள், ஆகியவற்றை பொதுமக்களிடம் பேசுவார். தற்போதுள்ள இளைய தலைமுறையினர் மற்றவர்களிடம் பேசுவது குறைந்து விட்டது. மொபைல் போனில் குறுந்தகவல் அனுப்பி அதன் மூலம் பேசி வருவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். இதை தவிர்க்க இளைஞர்கள் பேச்சாற்றல் பெற வேண்டும் என்பதற்காக பேச்சு பயிற்சி மிகவும் அவசியமாகிறது என அவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News