குமார பாளையத்தில் தேவாங்கர் எழுச்சி இயக்க மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

குமாரபாளையத்தில் தேவாங்கர் எழுச்சி இயக்க மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கட்டம் நடைபெற்றது.;

Update: 2022-04-10 12:30 GMT


குமார பாளையத்தில் நடந்த தேவாங்கர் எழுச்சி இயக்க செயல்வீரர்  கூட்டத்தில் மாநில செயலாளர் நாகராஜ் சுப்பிரமணியன் பேசினார்.

தேவாங்கர் சமுதாயத்தினர் பெரும்பாலோர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விசைத்தறி, கைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் செய்து வருகிறார்கள். இந்த சமுதாய மக்கள் முன்னேற்றத்திற்காகவும்,  கல்வி உதவி தொகை, மருத்துவ உதவி உள்ளிட்ட பொதுநல சேவைகள் செய்திடவும், தேவாங்கர் எழுச்சி இயக்கம் என்ற அமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.

இதன் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் பொன் செல்லம்மாள் திருமண மண்டபத்தில்மாவட்ட செயலர் வீனஸ் பாலு தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் தங்கபாண்டியன், செயலர் நாகராஜ் சுப்பிரமணி, பொருளாளர் விஜயபாஸ்கர், நிர்வாக செயலர் கபீர்தாஸ் ஆகியோர் எதிர்கால திட்டங்கள், கொள்கைகள் மற்றும் இயக்க செயல்பாடுகள், நிதிநிலை, இயக்க கட்டமைப்பு குறித்து பேசினர்.

குமாரபாளையம் நகர்மன்ற தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற்ற தேவாங்க சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர். புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், கல்வி ஆலோசனை வழங்குதல், மருத்துவமுகாம்கள் நடத்துதல், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் வெங்கடேசன், சிவகுமார், புஷ்பநாதன், சவுண்டப்பன், மணிகண்டன், விழா ஏற்பாடுகளை செய்தனர்.

Tags:    

Similar News