பிரச்சனைக்குரிய இடத்தில் வெட்டிய மரங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

குமாரபாளையம் அருகே பிரச்சனைக்குரிய இடத்தில் வெட்டிய மரங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் தீ வைத்தனர்.;

Update: 2025-02-10 14:00 GMT

பிரச்சனைக்குரிய இடத்தில் வெட்டிய மரங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

குமாரபாளையம் அருகே பிரச்சனைக்குரிய இடத்தில் வெட்டிய மரங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம்பாளையம் அருகே, வேளாங்காடு பகுதியில் அப்பகுதி இளைஞர்கள், ஊராட்சி நிர்வாகம் ஒப்புதலுடன் பண்ணை குட்டை அமைத்தனர். இதனால் வீணாகும் மழைநீர், சேமிக்கப்படுவதால், இப்பகுதி விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் நிலத்தடி நீரும் அதிகரிக்கும். இங்கு ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன. இவைகளை வளர்ந்த பின், இவைகளால் வரும் வருமானம் மூலம், அந்த கிராமத்திற்கு தேவையான பணிகள் செய்து கொள்வது என முடிவி செய்யப்பட்டது. இந்நிலையில் சில நாட்கள் முன்பு இந்த குட்டையில் விடப்பட சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் திருடப்பட்டன. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நேற்று காலை, இங்கு வெட்டி போடப்பட்ட எண்ணற்ற மரங்கள் மர்ம நபர்களால் தீயிடபட்டன. இதனால் பண்ணை குட்டை அமைத்த இளைஞர்கள் உள்பட, கிராம பொதுமக்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மரங்களுக்கு தீயிட்ட மர்ம நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பண்ணை குட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படவிளக்கம் : குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம்பாளையம் அருகே, வேளாங்காடு பகுதியில் பிரச்சனைக்குரிய இடத்தில் வெட்டிய மரங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் தீ வைத்தனர்

Tags:    

Similar News