மார்க்கெட் குத்தகைதாரர் நிலுவை பணத்தை வசூலிக்க கவுன்சிலர்கள் மனு

குமாரபாளையத்தில் மார்க்கெட் குத்தகைதாரர் நிலுவை பணத்தை உடனே வசூலிக்க கவுன்சிலர்கள் மனு கொடுத்துள்ளனர்.

Update: 2022-08-12 12:45 GMT

குமாரபாளையத்தில் மார்க்கெட் குத்தகைதாரர் பணம் நிலுவை வைத்துள்ளதால் உடனே வசூலிக்க கவுன்சிலர்கள் நகராட்சி சேர்மனிடம் மனு கொடுத்துள்ளனர்.

குமாரபாளையம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் சுங்கவரி வசூலிக்க நபர் ஒருவருக்கு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. உறுதி ஆனதும் உடனே தொகை செலுத்த வேண்டும் என்பது நியதி. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இதுவரை முழு தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார் எழுந்தது.

இது குறித்து நகரமன்ற கூட்டத்திலும் கவுன்சிலர்கள் புகார் கூறினார்கள். வார்டுகளில் பல பணிகள் பொது நிதி இல்லாததால் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, உடனே மார்க்கெட் குத்தகைதாரரிடம் பணம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கவுன்சிலர்கள் நகராட்சி சேர்மன், கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Tags:    

Similar News