பள்ளிபாளையத்தில் பா.ம.க. போஸ்டரால் பரபரப்பு!
பள்ளிபாளையத்தில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில், பாட்டாளி மக்கள் கட்சி தோல்வி அடைந்ததால் வருத்தம் அடைந்த கட்சியினர் ஒட்டி உள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பா.ம.க. போஸ்டரால் பரபரப்பு
பள்ளிபாளையத்தில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில், பாட்டாளி மக்கள் கட்சி தோல்வி அடைந்ததால் வருத்தம் அடைந்த கட்சியினர் ஒட்டி உள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மனைவி சௌமியா அன்புமணி தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி அவர் திமுக வேட்பாளர் மணியிடம் தோல்வியை தழுவினார் .
இது பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் பள்ளிபாளையம் நகர பாட்டாளி மக்கள் கட்சியினர், இன்று காலை நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டி உள்ள போஸ்டரில், ஆறுதல் கூற வார்த்தைகள் தேடினேன், வார்த்தைகள் வரவில்லை, கண்ணில் கண்ணீர் தான் வருகின்றது, எதைக்கொண்டு ஆறுதல் சொல்வேன் தாயே, கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு, தர்மபுரி மக்கள் மனதில் ஈரம் இல்லை என்று சொல்லவா, தோல்வி நிரந்தரம் கிடையாது, அதிலிருந்து மீண்டு வா என் தாயே,
என குறிப்பிடும் வகையில் அந்த போஸ்டரில் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது. மேலும் நகரின் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் தோல்விக்கு ஆறுதல் கூறும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில், பாட்டாளி மக்கள் கட்சி தோல்வி அடைந்ததால் வருத்தம் அடைந்த கட்சியினர், பள்ளிபாளையத்தில், ஒட்டி உள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது