குமாரபாளையத்தில் சி.பி.எம். நகர குழு கூட்டம்
குமாரபாளையத்தில் சி.பி.எம். நகர குழு கூட்டம் நடந்தது.;
குமாரபாளையத்தில் சி.பி.எம். நகர குழு கூட்டம் நகர குழு உறுப்பினர் சரவணன் தலைமையில் நடந்தது. பிப். 18ல் சி.பி.எம் மூத்த நிர்வாகி, ராமசாமியின் நூற்றாண்டு விழா சிறப்பு பேரவை கூட்டம் நடத்துவது, மக்களை பாதிக்கக்கூடிய ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, பிப். 23ல் குமாரபாளையம் மின்வாரிய அலுவலகம் முன்பு சி.பி.எம். சார்பில், நகர குழு செயலர் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, மனு கொடுத்தல் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் அசோகன், காளியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழ் வளர்ச்சி தின கருத்தரங்கம்
குமாரபாளையத்தில் சி.பி.எம் சார்பில் தமிழ் வளர்ச்சி தின கருத்தரங்கம் நடந்தது.
குமாரபாளையம் சி.பி.எம் சார்பில் கட்சி அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி தின கருத்தரங்கம் நகர செயலர் சக்திவேல் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் பங்கேற்று பேசினார்.
இவர் பேசியதாவது:
தமிழ்நாடு உருவான நவ. 1ஐ தமிழ்நாடு தினமாக தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும் என்று சி.பி.எம். வலியுறுத்தி வந்தது. 1956-ம் ஆண்டு நாட்டில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதனடிப்படையில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் உதயமாகின. அன்றைய சென்னை மாகாணமாகிய தமிழ்நாடு பல பகுதிகளை பறிகொடுத்தது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் நவம்பர் 1-ந் தேதியை மாநிலங்கள் உருவாகிய நாளாக கொண்டாடுகின்றன.. அண்மை காலமாக நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடும் கொண்டாட வேண்டும் என்கிற குரல் வலுத்து வந்தது. சி.பி.எம். இதற்கு குரல் கொடுத்தது.
இவ்வாறு அவர் பேசினார்.