குமாரபாளையம்; தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி

குமாரபாளையத்தில் தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2024-02-17 13:30 GMT

குமாரபாளையம் அறிவுசார் மையத்தில் நடந்த தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. சுகந்தி பேசினார்.

குமாரபாளையத்தில் தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.

குமாரபாளையம் அறிவுசார் மையத்தில் தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. சுகந்தி, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், ஓய்வு பெற்ற முதுநிலை விஞ்ஞானி இளங்கோ, திருச்சி, அண்ணா மேலாண்மை பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தை சேர்ந்த சக்திவேல், லால்குடி, ஆசிரியர் பயிற்றுனர், நுண்கலை வல்லுனர் தமிழரசி, கோவை, பாரதியார் பல்கலைக்கழகம், அறிஞர் தொழில் நெறி வழிகாட்டல் பேராசிரியை சத்யா, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் பங்கேற்று, மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்கள், தொழில் தொடங்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து கூறினர்.

நகராட்சி தலைவர் விஜய கண்ணன் மாணவ மாணவிகளுடன் பேசியதாவது:

தமிழக முதல்வர் ஒவ்வொரு நாளும், வருங்கால மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். அதில் ஒன்றுதான் இந்த அறிவுசார் மையம். இந்த அறிவுசார் மையத்தில் அனைத்து விதமான உயர்தொழில் நுட்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் தங்கள் அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நகராட்சி ஆணையாளர் சரவணன் பேசியதாவது:

நான் அரசு கலை கல்லூரியில் படித்தேன். அரசு தேர்வு எதிர்கொள்ளும் பயிற்சி பெற முடியாமல், பல வருடம் கழித்து அதே பயிற்சி கூடம் சென்று, பயிற்சி பெற்று, அரசு பணியில் சேர்ந்தேன். முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் ராஜ், சுமதி, ஜேம்ஸ், நிர்வாகிகள் செந்தில், விக்னேஷ் ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News