குமாரபாளையம் பகுதி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக சிறப்பு வழிபாடு

Annabishekam-குமாரபாளையம் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

Update: 2021-10-20 13:30 GMT

Annabishekam

Annabishekam-ஐப்பசி மாத பவுர்ணமி நாளில்,  ஆண்டுதோறும் சிவாலயங்களில் அன்னாபிஷேக வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும்,  அன்னம் வழங்குபவர் சிவபெருமான்,  அனைவருக்கும் ஆண்டு முழுதும் நிறைவான அன்னம் கிடைத்திட வேண்டி, அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. 

அவ்வகையில், குமாரபாளையம் பகுதி சிவாலயங்களில் இன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், பவானி ஊராட்சி கோட்டை மலை சிவன் கோவில், குமாரபாளையம் காளியம்மன் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அன்னாபிஷேகம், காய்கறி அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 


Tags:    

Similar News