மாநிலங்களவை உறுப்பினருக்கு பாராட்டு விழா

Update: 2021-01-22 09:04 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அகில இந்திய தேவாங்கர் கூட்டமைப்பு சார்பில் கர்நாடக மாநில மாநிலங்களவை உறுப்பினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சமுதாய வளர்ச்சிக்கு பல்வேறு கோரிக்கைகள் மாநிலங்களவை உறுப்பினரிடம் வைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஜேகேகே நடராஜா செட்டியார் அரங்கில் கர்நாடக மாநிலத்தில் தேவாங்கர் சமுதாயத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ஸ்ரீ டாக்டர் கே. நாராயணா என்பவருக்கு அகில இந்திய தேவாங்கர் கூட்டமைப்பு,பாரதிய ஜவுளி நலச்சங்கம் மற்றும் அகில இந்திய நெசவாளர் நல சங்கம் ஆகிய சங்கங்கள் ஒன்றிணைந்து பாராட்டு விழா நடத்தினர்.நிகழ்ச்சியினை ஜேகேகே நடராஜா கல்வி குழுமங்களின் இயக்குனர் திரு. ஓம் சரவணா அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னா ஓம் ஸ்ரீ கோடிலிங்க மூர்த்தி ஸ்வாமிகள் , ஸ்ரீஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி ஸ்வாமிகள் மற்றும் ஓம் ஸ்ரீ சந்திர மெளலீஸ்வரர் ஸ்வாமிகள் ஆகிய தேவாங்கர் குல ஜெகத்குருக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் நாராயணாவுக்கு பாராட்டு தெரிவித்து அமைப்பின் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து தேவாங்கர் சமுதாய கூட்டமைப்பு சார்பில் சமுதாய வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இதில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தேவாங்கர் சமுதாயத்தினர் மற்றும் நெசவாளர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பாரதிய ஜவுளி நல சங்கத்தின் தலைவரும் ஜேகேகே நடராஜா கல்வி குழுமங்களின் இயக்குனருமான ஓம்சரவணா அவர்களுக்கு சமுதாய மக்கள் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். முன்னதாக கர்நாடக மாநில மாநிலங்களவை உறுப்பினர் திரு.நாராயணன் அவர்களை ராஜம் திரையரங்கு முன்பிருந்து சேலம் சாலையில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம் வரை தேவாங்கர் சமுதாயத்தினர் உற்சாக வரவேற்பு கொடுத்து அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News