ஆட்டு கொட்டகைக்கு தீ வைத்த கும்பல்..! 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
பெத்தநாயக்கன்பாளையத்தில் ஆட்டு கொட்டகைக்கு தீ வைத்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றன.;
சேலம் : பெத்தநாயக்கன்பாளையத்தில் ஆட்டு கொட்டகைக்கு தீ வைத்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றன.
பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி 2-வது வார்டு சின்னம்மாசமுத்திரம் மதுரைவீரன்(45). என்பவருக்கு சொந்தமான கூரை கொட்டகையில், 15ஆடுகளுடன் நேற்று முன்தினம் இரவு தூங்கினார்.
அதிகாலை 5.30 மணியளவில் ஆடுகள் கத்தியுள்ளது. அப்போது மதுரைவீரன் தந்தை மருதமுத்து எழுந்து பார்த்த போது, கொட்டகை தீப்பற்றி எரிந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர், ஆடுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டு காப்பாற்ற முயன்றார்.
மருதமுத்து சத்தம் போட அருகில் இருந்தவர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த தீயில் மதுரை வீரனுக்கு நெற்றி, கையில் தீக்காயம் ஏற்பட்டது.
இது குறித்து ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார் மதுரைவீரன். அதில், கோயில் தேர் சம்பந்தமாக முன் விரோதம் இருந்ததால் 5 பேர் கொண்ட கும்பல் தனது கூரை கொட்டகைக்கு தீ வைத்து தப்பி சென்றதாகவும், அதை தான் பார்த்தாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து , போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்மந்தப்பட்ட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.