இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அறப்பளீஸ்வரர் கோயிலில் ₹1.82 கோடியில் கட்டிட பணி
கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோயில் வளாகத்தில் ₹1.82 கோடியில் கட்டிட பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.;
ஈரோடு : கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோயில் வளாகத்தில் ₹1.82 கோடியில் கட்டிட பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோயில் வளாகத்தில் ₹1.82 கோடியில் அன்னதான மண்டபம், கழிவறை, முடி காணிக்கை மண்டபம், படித்துறை, உடை மாற்றும் அறை, குளியலறை ஆகியவை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இதன் தொடக்க விழா அறப்பளீஸ்வரர் கோயில் வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் நந்தகுமார் தலைமை வகித்தார். வட்டார அட்மா குழு தலைவர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார்.
விழாவில், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.இதில் கோயில் ஆய்வாளர்கள் கனகராஜ், சந்தியா, செயல் அலுவலர் சுந்தரராசு, ராஜகோபுர உபயதாரர் ரவீந்திரரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.