நாகையில் போலீசார் மிரட்டியதாக கூறி பெண் தற்கொலை முயற்சி

நாகையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உறவினர்கள் மத்தியில் தரக்குறைவாக பேசியதால் விஷம் குடித்து பெண் தற்கொலைக்கு முயற்சித்தார்.

Update: 2021-10-03 14:16 GMT

விஷம் அருந்திய ரேவதி நாகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகப்பட்டினம் மறைமலை நகரை சேர்ந்தவர் பிளாக்கி என்கிற முகமது மெய்தீன். இவர் மீது சில வழக்குகள் உள்ளன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் கத்தியுடன் நின்றதாக வெளிப்பாளையம் போலீசார் முகம்மது மெய்தீனை கைது செய்தனர். இந்த நிலையில் முகம்மது மெய்தீன் வீட்டில் அவரது மனைவி ரேவதி உறவினர்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது  அங்கு வந்த   வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் உறவினர்கள் மத்தியில் தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும் ரேவதி மீது வழக்குப் போடுவதாக மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் ரேவதியை வீட்டை காலி செய்யுமாறு கூறினாராம்.

இதனால் மனம் உடைந்த ரேவதி விஷம் அருந்தியுள்ளார். அருகில் இருந்தவர்கள் ரேவதியை மீட்டு நாகப்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டியதால் பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News