நாகையில் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

நாகையில் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-03 07:25 GMT

நாகையில் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண் தம்பு ராஜ் தொடங்கி வைத்தார்.

வனங்களில் வாழும் அனைத்து விலங்குகள் மற்றும் உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆண்டு தோறும், அக்டோபர் முதல் வாரம், வன உயிரினப் பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி இன்று நாகையில் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில், நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், வனச்சரக அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புத்தூரில் இருந்து துவங்கிய சைக்கிள் பேரணியானது, கோட்டைவாசல்படி, வெளிப்பாளையம், காடம்பாடி உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை சென்றடைந்தது.

அப்போது வனங்களையும், விலங்குகளையும், பல்லுயிர்களையும் அனைவரும் பாதுகாக்க வேண்டும் என இந்த விழிப்புணர்வு பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News