நாகை: வேளாங்கண்ணி வட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் கலக்கம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Update: 2022-01-30 05:29 GMT

நாகை மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

தென் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் தமிழகம், வடகடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி, நாகூர், நாகப்பட்டினம், கீழ்வேளூர் திட்டச்சேரி, திருமருகல், திருப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது, தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது, பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சம்பா நெற்பயிர்கள் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில்திடீரென்று இப்படி மழை பெய்து வருவது விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News