தடுப்பூசி தட்டுபாட்டை போக்க விரைவில் நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

கோவேக்ஸின் இரண்டாம் டோஸ் தட்டுப்பாட்டை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகையில் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.

Update: 2021-07-13 07:10 GMT

நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் வானவில் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டும் நிலையத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார். 1 நிமிடத்தில் 333 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன்கொண்ட நிலையத்தை  கொரோனா மற்றும் பிற நோயாளிகளும் பயன்பெறும் வகையில் துவங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில் ; நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதாக கூறிய அமைச்சர், மூன்றாம் அலை வந்தாலும் சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். மேலும், நாகை மாவட்டத்தில் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முதல்வரிடம் பேசி சில தினங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு போக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஸ்வநாதன், திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News