உ.பி சம்பவம்: நாகையில் விவசாய சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க கோரி நாகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2021-10-13 03:08 GMT

உத்தரபிரதேசத்தில் கார் மோதி கொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நாகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய 4 விவசாயிகள் காரால் மோதி கொல்லப்பட்டனர். இதனை கண்டித்தும் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் அகில இந்திய விவசாய சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மெழுகுவர்த்தியை ஏந்தியவாறு விவசாய சங்கத்தினர் கண்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.


Tags:    

Similar News