நாகையில் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட மண்பானை வழங்கினார் கலெக்டர்

பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கலிட நாகை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு மண்பானைகளை வழங்கினார்.

Update: 2022-01-12 01:42 GMT
பொதுமக்களுக்கு மண்பானைகளை வழங்கினார் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மண்பானையில் பொங்கலிட வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் பயனாளிகளுக்கு மண்பானை வழங்கினார். அதோடு மண் சட்டி, மஞ்சள் கொத்து, நெற்கதிர், கரும்பு உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Tags:    

Similar News