உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவிக்கு நாகை கலெக்டர் வாழ்த்து

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவிக்கு நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2022-03-09 04:54 GMT

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவிக்கு நாகை கலெக்டர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

நாகப்பட்டினம் பெருமாள் கீழவீதியைச் சேர்ந்த ராமதாஸின் மகள் ஜனனி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ மேற்படிப்பிற்காக உக்ரைன் சென்றார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தனது மகள் ஜனனியை மீட்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே ரஷ்யா உக்ரைன் போரினால் கார்கிவ் நகரில் சிக்கிய ஜனனி உள்ளிட்ட இந்திய மருத்துவ மாணவிகளை, இந்திய தூதரக அதிகாரிகள் போலந்து நாடு வழியாக விமானம் மூலம் டெல்லி அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து நாகை வந்த மருத்துவ மாணவி ஜனனியை இன்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் உக்ரேனில் இருந்து தாயகம் திரும்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியருக்கு மருத்துவ மாணவி ஜனனி அவரது தந்தை ராமதாஸ் ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

பின்னர் கூறிய ஜனனி, உக்ரைனில் நடக்கும் யுத்தத்தினால் தாங்கள் தங்கியிருந்த ஹாஸ்டலின் அருகே நாள் முழுவதும் விடிய விடிய வெடிச்சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாகவும், படபடப்பும், பதற்றத்துடன் பல்வேறு சிரமங்களுக்கு இடையே தான் தாயகம் திரும்பி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தன்னை போல் இந்தியாவிலிருந்து மருத்துவம் பயில வந்த பல மாணவிகள் பல்வேறு பகுதிகளில் சிக்கியிருப்பதாகவும், உக்ரைனை விட்டு அவர்கள் வெளியேற முடியாமல் இருப்பது தமக்கு கவலை அளிப்பதாகவும், தாயகம் திரும்பிய ஜனனி கூறினார். மேலும் தன்னை மீட்டு இந்தியா அழைத்து வந்த மத்திய மாநில அரசுகளுக்கு அவர் நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.

Tags:    

Similar News