நாகையில் சித்தா சிகிச்சை மய்யம் கலெக்டர் திறந்தார்

நாகையில் சித்தா கொரோனா சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் இன்று திறந்து வைத்தார்.

Update: 2021-05-17 14:15 GMT

 நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் சித்தா கொரோனா சிகிச்சை மையத்தை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் இன்று திறந்து வைத்தார். 51 படுக்கைகள் கொண்ட சித்தா சிகிச்சை மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருந்து வகைகள், படுக்கை வசதிகள், ஆவி பிடிக்கும் கருவி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். ஏ கிரேடு கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் சிகிச்சை பெறுவதற்கு இந்த கொரோனா சித்தா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.,

மேலும் லேசான அறிகுறிகள் உள்ள கொரோனா நோயாளிகள் சித்த மருத்துவத்தில் 7 முதல் 14 நாட்களுக்குள் குணமாகி விடுவார்கள் என்று நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags:    

Similar News