நாகை ஶ்ரீ மஹாலக்ஷ்மி சாய்நாதர் ஆலய மகா கும்பாபிஷேகம்

நாகையில், ஶ்ரீ மஹாலக்ஷ்மி சாய்நாதர் ஆலய மஹாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2022-02-14 06:00 GMT

ஶ்ரீ மஹாலக்ஷ்மி சாய்நாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நாகை அடுத்துள்ள மஹாலக்ஷ்மி நகர் பகுதியில் புகழ்பெற்ற ஶ்ரீ மஹாலக்ஷ்மி சாய்நாதர் ஆலயம் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சாய்பாபா கோவிலான இவ்வாலயத்தில்,  இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 12-ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது.

தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இன்று காலை 8 மணிக்கு மேல் நான்காம் கால யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. சிறப்பு தீபாராதனைக்கு பின்னர், ஶ்ரீ மஹாலக்ஷ்மி சாய்நாதர் ஆலய ராஜகோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அப்போது புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து,  ஶ்ரீ மஹாலக்ஷ்மி சாய்நாதருக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி சாய் பாபாவை வழிபட்டனர்.

Tags:    

Similar News