நாகையில் குடியரசு தின விழா: மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்

நாகையில் குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தேசிய கொடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2022-01-26 10:10 GMT

குடியரசு தினவிழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார்.

இந்தியாவின் 73 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். அதேபோல் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை வேளாண்மைத்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 54 பயனாளிகளுக்கு 1 கோடியே 2 லட்சத்து 61 ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகத் தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News