ரமலான் நோன்பு  துவங்கியது

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நோன்பு  உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகையுடன் இன்று துவங்கியது

Update: 2021-04-14 02:41 GMT

நாகூர் தர்காவின் எழில்மிகு தோற்றம்

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நோன்பு  உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகையுடன் இன்று துவங்கியது ; கொரோனா அச்சத்தால் நாகூர் தர்காவில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்தது.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜானை முன்னிட்டு, பிறை பார்த்து அடுத்த 30 நாட்களுக்கு விரதம் எனப்படும் நோன்பு கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று இரவில் ரம்ஜான் பிறை தெரிந்ததால்,  இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையுடன் இன்று நோன்பை தொடங்கினார்கள்.

அதன்படி உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கொரோனா விதிகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து இஸ்லாமியர்கள் திராவியா எனப்படும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலக மக்கள் மீண்டு வர பிரார்த்தனை செய்தனர்.

கொரோனா அச்சம் காரணமாக ரமலான் நோன்பு காலங்களில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா  குறைந்த அளவிலான பக்தர்களோடு காணப்பட்டது. அரசின் விதிமுறைகளை பின்பற்றி இரவு 10 மணி வரை மட்டுமே தொழுகையில் ஈடுபடுவதாக கூறியுள்ள இஸ்லாமியர்கள் நோன்பு காலத்தில் ஜக்காத் எனப்படும் பண உதவியை ஏழைகளுக்கு செய்து வருவதால் வாழ்நாள் முழுவதும் மகிழ்வோடு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

Similar News