நாகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்கம்

நாகையில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-11 13:51 GMT
நாகையில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தி எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவதற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திட பிரச்சார வாகனத்தை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்தார்.  பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர் அங்கிருந்த பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்த பிரச்சார துண்டறிக்கையை வழங்கினார். தொடர்ந்து நாகை புதிய பேருந்து நிலையம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 நாட்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News