நாகூரில் மழையால் பாதித்த பகுதிகளில் மீன் வளர்ச்சி கழக தலைவர் ஆய்வு

நாகூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆய்வு செய்தார்.

Update: 2021-12-02 09:43 GMT

நாகூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் பார்வையிட்டார்.

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில், நாகை அடுத்த நாகூரில் மழை பாதித்த பகுதிகளில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

வள்ளியம்மை நகர், அமிர்தா நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது சாலை வசதி, வடிகால் வசதி, சாக்கடை வசதிகளை உடனடியாக செய்ய நகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News