நாகையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பு துவக்கம்

நாகை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான 4 நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு கலெக்டர் தலைமையுில் தொடங்கியது.

Update: 2022-01-20 05:03 GMT

நாகையில் ஊராட்சி தலைவர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பு தொடங்கியது.

நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அடிப்படை பயிற்சி தனியார் கல்வி நிறுவனத்தில்  நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாகை மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களை சேர்ந்த 74 ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.

பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஊராட்சி தலைவர்கள்.

கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு  73வது அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம், 1994 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும், ஊராட்சி மன்ற தலைவர்களின் கடமைகள், பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியானது வருகின்ற 22 ஆம் தேதி மாலை வரை 4 நாட்கள் நடைபெற இருப்பதாக நாகை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News