நாகையில் அரசு சார்பில் தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாம்

நாகையில் அரசு சார்பில் தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Update: 2021-12-18 12:50 GMT

வேலைவாய்ப்பு முகாம், மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் பணி ஆணை வழங்குதல்.

நாகப்பட்டினம் மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி ஆகியவை  இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் நடத்தியது.

. வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இதில் சென்னை, கோவை, திருச்சி, பெங்களூரு ஓசூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து 50 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு இளைஞர்களை தேர்வு செய்தனர்.

இந்த முகாமில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படித்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் கல்விதகுதிக்கு ஏற்ற நிறுவனத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Tags:    

Similar News