நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனம் எடுக்கும் பணி தீவிரம்

நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தன கட்டைகளில் இருந்து சந்தனம் எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-01-12 03:53 GMT

கந்தூரி விழாவையொட்டி நாகூர் தர்காவில் சந்தன கட்டைகளை அரைத்து சந்தனம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 465 ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்ச்சிக்காக சந்தனக்கட்டைகளை பாரம்பரிய முறைப்படி கல்லில் வைத்து தேய்த்து சந்தனம் எடுக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது.

 14 ஆம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் சன்னதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து சந்தன கட்டைகள் அரைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

Tags:    

Similar News