நாகப்பட்டினம் அருகே மகனின் பெட்ரோல் பங்க் பாதையை வேலி போட்டு அடைத்த தந்தை

நாகப்பட்டினம் அருகே மகனின் பெட்ரோல் பங்க் பாதையை வேலிப் போட்டு அடைத்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-11 02:53 GMT
நாகப்பட்டினம் அருகே மகனின் பெட்ரோல் பங்கை வேலிப் போட்டு அடைத்த தந்தையிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் கச்சனம் சாலையில் வசித்து வருபவர் 70 வயதான ரத்தினவேல். இவரின் மகன் ஆனந்த், தனது தந்தைக்கு சொந்தமான கச்சனம் சாலையில் உள்ள இடத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் வயதான தன்னை பார்த்துக்கொள்ள தனது மகன் ஆனந்திடம் ரத்தினவேல் கேட்டுள்ளார். அதற்கு ஆனந்த் மறுப்பு தெரிவிக்கவே, பெட்ரோல் பங்கு உள்ள இடத்தை மகன் ஆனந்திற்கு தான செட்டில்மெண்ட் செய்து கொடுத்ததை ரத்து செய்திட வேண்டும் என்று கடந்த ஆண்டு நாகை கோட்டாட்சியர் பழனிகுமாரிடம் தந்தை ரத்தினவேல் மனு அளித்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி பெற்றோர் முதியோர் பராமரிப்பு நல்வாழ்வு சட்ட விதிகள் 2007 இன்படி இரத்தினவேல் தனது மகன் ஆனந்திற்கு பெட்ரோல் பங்க் வைத்துக்கொள்ள கொடுத்த இடத்தின் தானசெட்டில்மெண்டை  கோட்டாட்சியர் பழனி குமார் ரத்து செய்து உத்தரவிட்டார்

அதனை தொடர்ந்து பெட்ரோல் பங்க் வாசலில் ரத்தினவேல் வேலி அடைத்து நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த நிலையில் நாகைக்கு புதிதாக வந்த கோட்டாட்சியர் அத்தியாவசிய பொருட்கள் விதிகளின்படி பெட்ரோல் பங்கை இயங்குவதற்கு அனுமதி அளித்தார்.

பின்னர் இன்று பெட்ரோல் வட்டாட்சியர் தலைமையில் குவிந்த நூற்றுகணக்கான போலிசார் வேலியை பிரிக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரத்தினவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பேச்சு வார்த்தை நடத்தி வேலியை பிரித்த போலிசார், இரு தரப்பினரையும் நாளை கோட்டாட்சியர் அலுவலகம் வருவதற்கு உதவிட்டதுடன்,  பிரச்சனை முடியும்வரை பங்கில் வியாபாரம் செய்யக்கூடாது என்றும் அறிவுறித்தனர்.

Tags:    

Similar News