நாகப்பட்டினம் பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்களை வழங்கிய கலெக்டர்

நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் பொது மக்களுக்கு மூலிகை தாவரங்களை வழங்கினார்.

Update: 2021-09-03 15:19 GMT

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்களை வழங்கினார்.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் 75 லட்சம் மூலிகை தாவர கன்றுகள் வழங்கும் திட்டத்தில் பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்கள்  வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மக்களை தேடி இந்திய மருத்துவம் திட்டத்தின் கீழ் நாகையில் பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்களை வழங்கினார்.

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட சித்த மருத்துவத்துறை சார்பாக நடத்தப்பட்ட மூலிகை தாவரங்கள் வழங்கும் நிகழ்வில் வெற்றிலை, ஓமம், கருவேப்பிலை, சிறு குறுஞ்சால், பெரு குருஞ்சால், திப்பிலி உள்ளிட்ட பல்வேறு மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News