நாகை மாவட்டத்தில் ரூ. 54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

நாகையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ரூ. 54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2022-03-08 14:11 GMT

நாகையில் நடந்த மகளிர் தினவிழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை, தாட்கோ வேளாண் பொறியியல் துறைகள் சார்பில் 54 லட்சரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

7 பெண்களுக்கு தாலிக்கு தங்கமும், ஐந்து நபர்களுக்கு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் உதவியும், இரண்டு பெண்களுக்கு தையல் இயந்திரங்களும், பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இரண்டு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் இரண்டு பெண் காவலர்களுக்கு சான்றிதழ்களை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர்.

மேலும் ஒரு திருநங்கைக்கு டிஜிட்டல் அடையாள அட்டையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர் செல்வம்,நாகை மாலி, நகர மன்ற தலைவர்கள் மாரிமுத்து, மா.மீ.புகழேந்தி,செல்வராஜ்,துர்கா பரமேஸ்வரி உள்ளிட்டடோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News