நாகையில் நகராட்சி தேர்தல் 16 வது வார்டில் வென்ற சுயேட்சை திமுகவில் இணைந்தார்

16 ஆவது வார்டில் போட்டியின்றி வென்ற நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த வேட்பாளர் சுரேஷ் திமுகவில் இணைந்துகொண்டார 

Update: 2022-02-10 17:34 GMT

நாகை நகராட்சி 16 வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் மீனவர் அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

நாகை நகராட்சி 16 வது வார்டில்  போட்டியின்றி வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் மீனவர் அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

நாகை நகராட்சியில் உள்ள 16 ஆவது வார்டில் திமுக - அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்படாமல் இருந்தது.  இந்த நிலையில் 16 ஆவது வார்டில் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கிராம மக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றி சான்றிதழை வழங்கிய நிலையில், சுயேட்சை வார்டு உறுப்பினராக அறிவிக்கப்பட்ட சுரேஷ் இன்று திமுகவில் இணைந்துகொண்டார்.  நாகை மாவட்ட திமுக அலுவலகத்தில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தலைமையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் முன்னிலையில் சுயேட்சை வார்டு உறுப்பினர் சுரேஷ் திமுகவில் இணைந்தார்.  திமுகவில் இணைந்த வார்டு உறுப்பினர் சுரேசை திமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதன் காரணமாக நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 16 ஆவது வார்டை திமுக கைப்பற்றி வெற்றியை உறுதி செய்துள்ளது.


Tags:    

Similar News