நாகையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் வாக்களித்தார்

188 வாக்கு சாவடிகளில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கியது தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் வாக்களித்தார்

Update: 2022-02-19 05:02 GMT

நாகையில் வாக்களித்த தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன்

நாகையில் காலை முதலே விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு ; தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாகை நகராட்சி, வேதாரண்யம் நகராட்சி, கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திட்டச்சேரி தலைஞாயிறு, உள்ளிட்ட பேரூராட்சிகளில் வாக்கு பதிவு இன்று தொடங்கியது. 188 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது. நாகை 36 ஆவது வார்டில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி வாக்கு பதிவு மையத்தில் ஏராளமான மீனவர்கள் ஆர்வத்துடன் தங்களுடைய வாக்கினை பதிவு செய்தனர். தொடர்ந்து 36 வது வார்டில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Tags:    

Similar News