திமுக வர்த்தக அணி சார்பில் பொது மக்களுக்கு கப சுர குடிநீர்

நாகப்பட்டினத்தில் திமுக வர்த்தக அணி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Update: 2021-05-13 12:15 GMT

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் திமுக சார்பாக பல்வேறு இடங்களில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் உத்தரவின்பேரில் நாகை பெரிய கடைத்தெருவில் திமுக வர்த்தகர் அணி சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் முருகன் தலைமையில் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாகனம் மூலம் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நாகை பெரிய கடைத்தெருவில் துவங்கிய கபசுர குடிநீர் வழங்கும் வாகனம் மூலம் நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு தினமும் கபசுர குடிநீர் வழங்கப்பட இருப்பதாக திமுகவினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News