அஜித், விஜய் பாடலுடன் சிகிச்சை: நாகையில் கொரோனா சிகிச்சை மையம் ரெடி

நாகை அரசு கல்லூரியில், ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தயாராக உள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-12 00:30 GMT

நாகை பாரதிதாசன் கல்லூரியில், 200 படுக்கைகள் கொண்ட சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தை, ஆட்சியர் அருண் தம்பு ராஜ் ஆய்வு செய்தார்.

நாகை மாவட்டத்தில் கொரோனா பரவல் 100ஐ தாண்டியுள்ளது. இதனிடையே, மாவட்ட நிர்வாகம் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாகை பாரதிதாசன் கல்லூரியில்,  ஆக்சிஜன் வசதிகளோடு கூடிய 200 படுக்கைகள் கொண்ட சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கெளதமன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். லேசான அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகள் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில்,  24 மணி நேர மருத்துவர்கள் இருக்கவும், சிசிடிவி கண்காணிப்பு, கொரோனா நோயாளிகள் மன இறுக்கம் போக்க அஜித் விஜய் பாடல்கள் உள்ளிட்ட சினிமா பாடல்கள் ஒலிபரப்பு என, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News