நாகையில் ஐந்தாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் : ஆட்சியர் வேண்டுகோள்

மாவட்டம் முழுவதும் 69 % முதல் தவணையும், 22 % இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . மீனவர்கள் அவசியம் வரவேண்டும்

Update: 2021-10-09 04:49 GMT

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ்

மீனவ மக்கள் ஒருநாள் தொழில் விடுமுறைவிட்டு வருகின்ற ஞாயிற்று கிழமை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்க வேண்டும்  நாகை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

தமிழக அரசின் உத்தரவின்பேரில், நாகை மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் பிரதி ஞாயிற்றுகிழமைகளில் நடைபெற்று வருகிறது. நான்கு வாரங்கள் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில், நாகை மாவட்டம் முழுவதும் 69 சதவீதம் முதல் தவணையும், 22 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், வருகின்ற 10 -ஆம் தேதி ஞாயிற்று கிழமை நடைபெற உள்ள மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆட்சியர், ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாமில் 328 முகாம்கள் அமைக்கப்பட்டு 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக கூறினார். கர்ப்பிணி பெண்கள், நீரழிவு நோய் முதியவர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும். நாகை மாவட்டத்தில் உள்ள மீனவ மக்கள் ஞாயிற்று கிழமை ஒருநாள் தங்களது தொழிலுக்கு சிறப்பு விடுமுறைவிட்டு கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News