நாகை அருகே அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ் பறிமுதல்

நாகை அருகே அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ்சை கலெக்டர் உத்தரவுபடி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-12-14 13:15 GMT

கலெக்டர் உத்தரவுபடி பறிமுதல் செய்யப்பட்ட தனியார் பஸ்.

சமீபகாலமாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூடுதலான ஆட்களை ஓட்டுநர்கள் ஏற்றிச் செல்வதால், அதிலிருந்து சிலர் தவறி விழுந்து உயிர் இழப்பதுடன் பெரும் விபத்தும் நேரிடுகிறது. இதனிடையே இன்று வேதாரண்யத்தில் இருந்து  நாகப்பட்டினம் நோக்கி வந்த தனியார் பேருந்து அதிக அளவிலான பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றது


அப்போது பேருந்தில் வந்த பல மாணவர்கள் கூட்ட நெரிசலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதனை அவ்வழியே காரில் சென்ற நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்கவனித்து உடனடியாக புகைப்படம் எடுத்து அதனை வட்டார போக்குவரத்து ஆய்வாளருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து நாகை அடுத்த புத்தூர் அருகே தனியார் பேருந்தை மடக்கிப் பிடித்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபு உயிரிழப்பு ஏற்படுத்தும் வகையில் அளவுக்கு அதிகமாக நபர்களை ஏற்றி வந்த பேருந்தை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்து ஓட்டுநர் நடத்துனரிடம் விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News