'நாகை- 30' விழாவில் கோலம் வரைந்து அசத்திய சுயஉதவி குழு பெண்கள்

‘நாகை- 30’ விழாவில் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் கோலம் வரைந்து தங்களது திறமைமையை வெளிப்படுத்தினர்.

Update: 2021-10-21 03:01 GMT

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண்கள் வரைந்த கோலம்.

நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆவதையொட்டி 'நாகை- 30' விழா கடந்த 18ஆம் தேதி துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான நேற்று நாகை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற கோலப்போட்டியில் ஏராளமான மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் பங்கேற்ற ஒவ்வொருவரும், விவசாயம்,  மீன் பிடித்தல்,  சமூக நல்லிணக்கம், மும்மத வழிபாட்டு தலங்கள் என நெய்தல் நிலத்து மண்ணின் அத்தனை பண்பாட்டு பெருமைகளையும் வண்ணக்கோலங்களால்  வரைந்து அசத்தினர்.

பெண்கள் வரைந்த கோலங்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.

இதில் குறிப்பாக கோடியக்கரை பறவைகள் சரணாலயம், நாகை கலங்கரை விளக்கம், உள்ளிட்ட வண்ணகோலங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மகளிர் சுய உதவிக்குழுவினர் வரைந்த வண்ணக்கோலங்களை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு அவர்களைப் பாராட்டினார். சிறந்த வண்ண கோலத்திற்கு நாகை 30 இறுதி நாள் விழாவில் பரிசுகள் வழங்கி அவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

Tags:    

Similar News