ஒளி- ஒலி அமைப்பாளர்கள் கொரோனா விழிப்புணர்வு

Update: 2021-04-21 08:45 GMT

நாகப்பட்டினத்தில் 200க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கி வாகனங்களுடன் பேரணியாக சென்று கொரோனா விழிப்புணர்வை ஒளி ஒலி அமைப்பாளர் நல சங்கத்தினர் ஏற்படுத்தினார்கள் .

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகையில் ஒளி ஒலி அமைப்பாளர் நல சங்கத்தினர் பேரணியில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஒலிபெருக்கியை அமைத்து நாகை அவுரி திடலில் பேரணியை தொடங்கிய அவர்கள் நாகப்பட்டினம் - நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் விழிப்புணர்வில் ஈடுபட்டனர். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வில் ஈடுபட்டனர். நாகையில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி நாகூர் வரை சென்று அங்கு முடிவடைந்தது.

Tags:    

Similar News