இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டு

நாகை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

Update: 2022-01-23 05:01 GMT

நாகை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டு தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்துணர்வு கொடுக்க தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டம் நாகை மாவட்டத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் களப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு விழா நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட்டார கல்வி அலுவலர்கள், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர், பள்ளி துணை ஆய்வாளர், தலைமையாசிரியர்கள் என பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹாரிப் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அருண் தம்பு ராஜ் கேடயம் மற்றும் பரிசு, புத்தகங்கள் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, மாவட்டத்தில் 10 சிறந்த பள்ளி மேலாண்மை குழுவிற்கு வருகின்ற 26 ஆம் தேதி குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News