நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

Update: 2022-02-24 09:06 GMT

கலெக்டரிடம் அழுகிய நெல்லை விவசாயிகள் காட்டினர்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாகை வேதாரண்யம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு வந்த செம்போடை பகுதி விவசாயிகள், சமீபத்தில் பருவம் தப்பி பெய்த மழையால், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 40,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் அழுகி முளைத்துவிட்டதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் ஆட்சியர் அருண் தம்புராஜ்டம் கோரிக்கை விடுத்தனர்.

பயிர் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு முறையாக கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் விவசாயிகளிடம் உறுதியளித்தார். இதனிடையே கூட்டத்தில், நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணிகளில் பணியாளர்கள் பாரபட்சம் காட்டுவதாக சராமாரி குற்றம் சாட்டிய விவசாயிகள், இந்த விவகாரத்தில் மழுப்பல் பதில் கூறும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மீது ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியதால் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

Tags:    

Similar News