நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

பொட்டாஷியம் உரத்திற்கு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என நாகையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2021-12-24 11:35 GMT

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசிய விவசாயிகள் பொட்டாஷியம் விலையை குறைக்க வலியுறுத்தினர்.

1700 ரூபாய்க்கு விற்பனை செய்து வரும் பொட்டாஷியம் உரத்திற்கு ஒன்றிய அரசு வெறும் 303 ரூபாய் மட்டுமே மானியம் வழங்குவதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், ஒன்றிய அரசு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், பொட்டாஷியம் உரம் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

Tags:    

Similar News