நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சுற்றுலா ஸ்தலங்கள்

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக முக்கிய சாலைகள் மற்றும் சுற்றுலா ஸ்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2022-01-16 07:48 GMT

முழு ஊரடங்கால் நாகை நகரமே வெறிச்சோடியது.

கொரோனா பரவல் காரணமாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக முக்கிய சாலைகள் மற்றும் சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. நாகை பேருந்து நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, மருத்துவமனை சாலை மற்றும் நகரின் முக்கிய சாலைகள் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல உலக புகழ்பெற்ற சுற்றுலா தளமான வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா உள்ளிட்டவைகள் பக்தர்கள் கூட்டமின்றி காணப்பட்டது. ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் உள்ள வாஞ்சூர், கானூர், அருந்தவன்புலம், செங்காந்தலை,  சேஷமூலை, மானாம்பெட்டை, வால்மங்கலம் உள்ளிட்ட 7 சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News