நாகையில் ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சங்கத்தினர் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

Amarar Oorthi-பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வலியுறுத்தி, நாகையில் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சங்கத்தினர் வாகனங்களில் கொரோனா விழிப்புணர்வு பாடல்களை ஒலித்தவாறு பேரணியாக சென்று பிரசாரம் செய்தனர்.

Update: 2021-04-24 08:45 GMT

Amarar Oorthi-பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்தி, இன்று நாகையில் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சங்கத்தினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

நாகப்பட்டினம் கோட்டைவாசல் முகப்பில் இருந்து துவங்கிய பேரணி யில் 30க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சங்கத்தினர் வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி பேரணியானது கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடல்களை ஒலித்தவாறு நாகூர் வரை சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News