மத்திய அரசை கண்டித்து நாகை துறைமுகத்தில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்

மீனவர்களின் கரங்களை மத்திய அரசு நசுக்குவதை உணர்த்தும் வகையில் கைகளில் இரும்பு சங்கிலிகளை கட்டி கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Update: 2021-07-20 15:02 GMT

மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்திற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து நாகை துறைமுகத்தில் காங்கிரஸ் கட்சியினர் இரும்பு சங்கிலியால் கைகளை கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை துறைமுகத்தில் காங்கிரஸ் கட்சி மீனவரணி சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் புதிய மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மீனவர்களின் கரங்களை மத்திய அரசு நசுக்குவதை உணர்த்தும் வகையில் கைகளில் இரும்பு சங்கிலிகளை கட்டிகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி மீனவ அணியினர், மீனவர்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படும் என்பதால் புதிய மீன்பிடி மசோதாவை வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத்தினார்கள்.


Tags:    

Similar News